நாளை போட்டி சட்டமன்றம்: திமுக அறிவிப்பு

சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டத்தில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு எதிராக போட்டி சட்டமன்ற கூட்டத்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஒரு வருடமாகவே திமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தொடங்கிய கூட்டத் தொடரிலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை காரணம் காட்டி  அமளியில் ஈடபட்டு வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து எடப்பாடி பதவி விலகும் வரை சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

மேலும், திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தவிருபப்தாகவும் அறிவித்து உள்ளார்.

இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கு வெளியே போட்டி சட்டமன்றத்தை திமுகவினர் நடத்தினர். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தவிருபப்தாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது.