தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண் மேல்முறையீடு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் ஊழியரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தலைமை நீதிபதியிடமே மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இப்படி மேல்முறையீடு செய்வதற்கான விதிகள் உள்ளதாக, அந்தப் பெண் ஊழியரின் வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் வீட்டு அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார் 36 வயதுடைய அந்த ஊழியர். கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார் நீதிபதி என உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார் அந்தப் பெண்.

ஆனால், இந்தப் புகாரை நீதித்துறையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என விமர்சித்தார் ரஞ்சன் கோகோய். பின்னர் அந்தப் பெண்ணின் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில்தான் மேல்முறையீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.