புகாரா…? கண்ணகி பற்றி இன்னும் ஆழமாக பேச வாய்ப்பு!: மருத்துவர் ஷாலினி

ண்ணகியை அவதூறு செய்ததாக தன் மீது புகார் அளிப்பதை வரவேற்பதாக பிரபல மனநல மருத்துவர் ஷாலினி patrikai.com  இதழிடம் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனநல மருத்துவர் ஷாலினி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், கண்ணகியை இழிவுபடுத்தும்படியாக பேசியதாக,   மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை”யினர்    கம்பம் வடக்கு காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர்.

இந்தநிலையில் தமிழ் எழுச்சிப் பேரவை என்ற அமைப்பின் சார்பாக ஷாலினி மீது சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்போவதாக  தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர் ஷாலினியை தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “தன்னை இழிவு படுத்தியதாக கண்ணகியே அல்லவா வந்து புகார் கொடுக்க வேண்டும்” என்று கேட்டவர், “கடந்த பத்து வருடமாக இது குறித்து பேசி வருகிறேன். இப்போது சிறிய விசயங்களையெல்லாம் ஊதிப் பெரிதாக்கும் சூழல் நிலவுகிறது. புகார் கொடுத்தால் கொடுக்கட்டும்.  இதன் மூலம் இன்னும் ஆழமாக கண்ணகி குறித்து விவாதிக்க வாய்ப்பு ஏற்படும். ஆகவே என் மீது புகார் கொடுப்பதை வரவேற்கிறேன்” என்றார்.