மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக கமல்மீது வழக்கு பதிவு!

வள்ளியூர்,

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமலஹாசன் இந்து மதத்தை இழிவு படுத்தி கருத்து சொன்னதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமலஹாசன் கருத்துக்கு பல்வேற இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள நிலையில், இன்று வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு  பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், மகாபார தத்தை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.