சென்னை:
ண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரில் விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வு விவகாரம், அண்ணாபல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அரசுடன் ஏற்பட்ட மோதலால் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக மத்திய அரசு அறிவித்ததற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசிந அந்தஸ்து கிடைத்தால் தமிழக அரசின் வசம் இருந்து மத்திய அரசிடம் செல்லும். அப்படி இருக்கும் நிலையில் கல்வி கட்டணமும் உயரும். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாகனியாக மாறிவிடும். இதனால் தமிழக அரசு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று அறிவித்தது. இதனிடையே அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னிசையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து விரைவில் தருமாறும், இதற்கு மாநில அரசின் நிதியுதவி வேண்டாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது கவனிக்கதக்கது.