சசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்!

சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.  தற்போது முதல்வராக முயற்சி எடுத்துவருகிறார்.

இந்த நிலையில், “அறப்போர் இயக்கம்”  சார்பில் தமிழக டிஜிபியிடம் சசிகலா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சசிகலாவும், அவரது உறவினர்களும் கடந்த இருபது வருடங்களாக  தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய இடங்களில் 112 ஏக்கர் நிலத்தை சசிகலாவும், அவரது உறவினர்களும் ஆக்கிரமித்திருப்பதாகவும்  இவர்கள்  மீது வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி