சென்னை: சுவாதி கொலை தொடர்பாக பேஸ்புக்கில் சர்ச்சைக்குறிய கருத்தை பதிந்திருந்தார்  காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். அதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஒருமையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு கண்டனங்களுக்கு ஆளானதும், அதை நீக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டார்.
இந்த நிலையில் குறித்து அவதூறு பரப்பிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா சென்னைக் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
“நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்று தெரிவதற்கு முன்பே பல விதமான கருத்துக்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.
download
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனும் இந்த கொலை தொடர்பாக ஒரு கருத்தை தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டார். அதில், சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டார்.  பிறகு , தனது கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதேபோல ராகுல்காந்தி மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டை கூறி பின்னர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது தவறுக்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்டாலும், ஒய்.ஜி.மகேந்திரன் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அவ்வாறு போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் வீடு மற்றும் அவர் நாடகம் நடத்தும் நாடக சபா முன்பும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
இந்தப் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஒய்.ஜி. மகேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.