கெஜ்ரிவால் மீது வழக்கு….மம்தா தலைமையில் எதிர்கட்சிகள் டில்லியில் போராட்டம்

டில்லி:

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்தியேந்திர குமார் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 6வது நாளாக இன்றும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கவர்னரின் சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிட எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இந்த போராட்டம் நடத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக ராஜ் நிவாஸில் கெஜ்ரிவாலை மம்தா இன்றிரவு சந்திக்கிறார். இவரை தொடர்ந்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.