காலச்சுவடு:

ர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் தனது மனைவி விஜியை கொன்றதாக ஒரு தகவல் 1997ம் ஆண்டு எழுந்தது.

இவரது மனைவி பெயர் ‘விஜி’ எனப்படும் விஜயகுமாரி .. இவர் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து ஆன்மிகம், இஷா ஆஸ்ரம பணிகளை கவனித்து வந்தார் .. திடீரென  1997 அம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மர்மமான முறையில் இறந்தார் . அவர் உடல்,  அவசர அவசரமாக – பெற்றோர்கூட பார்க்க வாய்ப்பளிக்கப்படாமல் –  இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தகவல் கசிந்தது.

விஜியின் தந்தை (ஜக்கியின் மாமனார்) தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டார் என்றும் பெங்களூரு  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் 1997ல் வெளியான செய்தி

இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் இஷா அஷ்ரமதுக்கு விசாரணைக்கு வந்த போது “சத்குரு” ஜக்கி வாசுதேவ் அவசரமாக அமெரிக்கா பறந்து விட்டார்.

பிறகு போலீசாரிடம், ஜக்கி, வாசுதேவ் (அப்போதையா ஜெகதீஷ்) தன் மனைவி ஒரு விதமான பிராணாயமா பயிற்சி செய்த போது மூர்ச்சையாகி விட்டார் எனவும் அது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என்றார்.

அவரது செல்வாக்கால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

இது குறித்து அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட சில நாளேடுகளில் செய்திகள் வெளியாகின. ஜூனியர் விகடன் வார இதழும் அப்போது செய்தி வெளியிட்டது.

ஹூம்.. “ஜகத்குரு” லீலைகள்!