கோவை: கோவை மாவட்டத்தில் 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று மாலை முதல் அமலுக்கு வந்தது.
கொரோனா பரவலை தடுக்க இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த 5, 12 மற்றும் 19-ந் தேதிகளில் இந்த ஊரடங்கு அமலானது.
இந் நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை 36 மணி நேரம் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நடைமுறை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
மருத்துவ சேவைகள், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்யாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறும் வகையில் தேவையின்றி வெளியில் நடமாடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்னர்.