உருமாறிய கொரோனா பரவல் : பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்

ண்டன்

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடெங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் தற்போது 27.13 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் 76,431 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில் தெற்கு பகுதியில் உருமாறிய  கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வைரஸ் ஏற்கனவே உள கொரோனா வைரசைப் போல் 70% வேகமாகப் பரவும் தன்மை உடையதாகும்.   எனவே பல உலக நாடுகள் பிரிட்டனுக்கான விமானச் சேவையை ரத்து செய்தன.  ஆயினும் கொரோனா வைரஸ் அதிக அளவில்  பரவி வருவதால் நாட்டில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏஎற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் பல தளர்வுகளை அறிவித்திருந்த பிரிட்டன் அரசு அவற்றை ரத்து செய்தது.  ஊரடங்கு தளர்வுகள் பல ரத்து செய்த போதிலும் பரவல் கட்டுக்குள் வரவில்லை.  எனவே பிரிட்டன் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப் போவதாகப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இதையொட்டி பிரிட்டன் முழுவதும் பொது மக்கள் நடமாட்டத்துக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  நாடெங்கும் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.