55 வயதை கடந்த போலீசா?  அப்போ, கட்டாய  விடுமுறை..

55 வயதை கடந்த போலீசா?  அப்போ, கட்டாய  விடுமுறை..

மும்பை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 3 காவலர்கள் அடுத்தடுத்து  மூன்று நாட்களில்  உயிர் இழந்தனர்.

அவர்கள் அனைவரும் 50 வயதைக் கடந்தவர்கள்.

இதையடுத்து 55 வயதைத் தாண்டிய மும்பை போலீசார் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் வரை விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘’மும்பை நகரை மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள காவலர்கள்  உயிரைக் காக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. எனவே 55 வயது கடந்த போலீசார் எந்த வித ரிஸ்க்’கும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவுடன் அவர்களை  விடுமுறையில் செல்லுமாறு கூறியுள்ளோம்’’ என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 20 அதிகாரிகள் உள்ளிட்ட 107 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் மும்பை நகரக் காவல் துறையில் பணியாற்றுவோர்  என்பதும்,அவர்களில் பலர் 50 வயதைக் கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

– ஏழுமலை வெங்கடேசன்