பொங்கலுக்கு கட்டாய விடுப்பு: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

--

சென்னை,

மிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார்.

பொங்கல் பண்டிகை கட்டாய விடுப்பு பட்டியலில் இல்லை என்றும், தற்போதுதான் நீக்கப்பட்டு உள்ளது என்றும் பல கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பொங்கலுக்கு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலக்ங்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அதே போல் திருவள்ளுவர் தினத்துக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

இனி வரும் காலங்களில் அனைத்து ஆண்டுகளிலும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அவர் எழுதியுள்ளார்.