கம்யூட்டர்களைக் கண்காணிக்கும் மத்திய அரசு! 

 

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசின் பத்து துறைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், 10 துறைகளுக்கு  நாட்டிலுள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க  வேண்டும். அதிலிருந்து என்னவகையான செய்திகள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது அல்லது பெறப்படுகிறது என்பதை கண்காணிக்க  வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-க்குட்பட்டு நாட்டின் இறையாண்மையையும் வெளிநாட்டுடன் கொண்ட நட்புறவை பேணுவதற்காகவும் இந்த கண்காணிப்பு செய்யப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

You may have missed