சென்னை: தோழர் தா.பாண்டியன் அவர்கள் மறைவு இடதுசாரி இயக்கம் மற்றும் தமிழக அரசியலுக்கு பேரிழப்பு என கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

88வயதாகும்  மூத்த கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வந்தவர்.1932ம் ஆண்டு செப்டம்பர் 25ந்தேதி மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பிறந்த தா.பாண்டியன், கம்யூனிஸ்டு கட்சி மீதான மோகத்தால், அதில் இணைந்து,  இந்திய பொதுவுடமைக் கட்சி இன் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

1989 மற்றும் 1991 இல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்  வட சென்னை மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் விளைவாக இரண்டு முறை மக்களவையில் இடம் பெற்றார்.

1991ம் ஆண்டு  தலைவர் ராஜீவ் காந்தி பேசுவதை தமிழில் மொழி பெயர்க்க அன்னை மரகதம் சந்திரசேகர் அவர்களால் அழைக்கப் பட்டவர் ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து மறுபிறவி கண்டார்.

1996 ல் தேர்தலில் தா.பா. அவர்கள் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளராகவும் நான் ஆசியாவின் மிக பெரிய தொகுதியான வில்லிவாக்கம் சட்டமன்ற வேட்பாளராகவும் போட்டியிட்டு ஜெ. எதிர்ப்பு அலையில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மிகச் சிறந்த பேச்சாளர் மொழி பெயர்ப்பாளர் சிறந்த தமிழ் உச்சரிப்பு. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என இராமாபுரம் M.G.மோகன் நினைவு கூர்ந்துள்ளார்.

முன்னதாக ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கி, 1983ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை மாநிலத் தலைவராக பதவி வகித்தார்.

2000ம் ஆண்டு ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியை கலைத்து விட்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன்  இந்தார்.

2005 முதல் 2015 வரை 3 முறை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.