நவராத்திரி கொலுப் படி தத்துவம்
நவராத்திரியில் 3,5,7 மற்றும் 9 படிகள் கொண்ட கொலு வைப்பது வழக்கமாகும்.  இதில் 9 படி சிறப்பானதாகும்.  இந்த 9 படி குறித்த தத்துவம் இதோ
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதன் படிப்படியாக உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம்.
இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம்.
 முதலாவது படி
ஓரறிவு உயிர்ப் பொருட்களான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்
இரண்டாவது படி
இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்
மூன்றாவது படி
மூன்றறிவு உயிர்களான எறும்பு, ஊறும் உயிரின பொம்மைகள்
நான்காவது படி
நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்
ஐந்தாவது படி
ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள்
ஆறாவது படி
ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்
ஏழாவதுபடி
மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள்
எட்டாவதுபடி
தேவர்கள் உருவங்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள் முதலிய பொம்மைகள்
ஒன்பதாவதுபடி
பிரம்மா, விஷ்ணு, சிவன், மும்மூர்த்திகள் அவர் தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி பொம்மைகள் (ஆதிபராசக்தி நடுவில்) இருத்தல் வேண்டும்.