Random image

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி கவலைக்கிடம்

டில்லி:

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி மூளை செயல் இழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் முதல் டில்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 92 வயதான அவருக்கு தற்போது சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டது.

இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவிக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

‘‘எனது தந்தையின் உடல் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.  அவர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்’’ என்று அவரது மகன் ரோகித் சேகர் திவாரி தெரிவித்தார்.