சரக்கு வாங்கத்தான் என்னென்ன கண்டிஷன்கள்…?’

ஊரடங்கு குடிமகன்களை ரொம்பவே பாடாய் படுத்துகிறது.

நம் ஊரில் மது வேண்டுமானால், குடை எடுத்து வரவேண்டும், ஆதார் அடையாள அட்டை அவசியம் , முகக்கவசம் அணிய வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகள்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில், சரக்கு வாங்கச் சென்றால், குடிமகன்களிடம் முதலில் விண்ணப்பாரம் ஒன்று நீட்டுகிறார்கள், விற்பனையாளர்கள்.

‘குடிமகனின் வயதை அந்த விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

நோய் ஏதாவது உள்ளதா? இருப்பின் என்ன நோய்? எத்தனை  பாட்டில்கள் வாங்கப்போகிறீர்கள்? என்பன போன்ற விவரங்களையும் விண்ணப்பத்தில் நிரப்பினால் மட்டுமே  சரக்கு பாட்டில் கொடுக்கப்படும்.

இது என்ன புது நிபந்தனை?

‘’ மதுப்பாட்டில்களை வீட்டில் நிறைய ’’ஸ்டாக்’ வைக்காமல் தடுக்கவும், உடல் நிலை சரி இல்லாத குடி,மகன்களுக்கு, சரக்கு கொடுக்காமல் இருக்கவும் தான் இந்த ஏற்பாடு’’ என்று விளக்கம் தந்தனர், அங்குள்ள கலால் பிரிவு அலுவலர்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்