கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் களேபரத்தால், உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு என்ற புதிய பிரச்சினை எழுந்துள்ளது.

ஆணுறை தயாரிப்பில் ஈடுபடுவதில் மலேசியா முக்கியமான நாடாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அந்நாட்டில் பல ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மலேசியாவின் கரேக்ஸ் பிஹெச்டி காண்டம் தயாரிப்பு நிறுவனம் உலகின் மிகபெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தற்போது தன் தயாரிப்பை நிறுத்தியுள்ளது. டியூரக்ஸ் ஆணுறை நிறுவனம் உலகம் முழுக்க ஒரு நாளைக்கு 10 கோடி ஆணுறைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பிரிட்டன் பொதுத்துறை மருத்துவ நிறுவனமான என்ஹெச்எஸ் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டியூரக்ஸ் நிறுவனம் 50% தயாரிப்புப் பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காண்டம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் டிமாண்டுக்கு ஏற்ற தயாரிப்பு இருக்காது.

இதனால் இன்னும் சில மாதங்களில் உலக அளவில் அனைத்து நாடுகளிலும் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மற்ற காண்டம் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் கொண்ட முக்கிய நாடுகளில் சீனா முன்னணி வகிக்கிறது.

அதற்கடுத்து இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் காரணமாக ஆணுறை தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மெடிக்கல் கிளவுஸ் தயாரிப்பில் மலேசியா முன்னணி வகிக்கிறது. மெடிக்கல் கிளவுஸ் அதிகம் தேவைப்படும் நிலையில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.