உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்துக: தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று  தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி ஆணையிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், தமிழகத்தில் உடனடியாக  உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட  வேண்டும் என்றும்  உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.  மாநகராட்சிகளிலும் 919 வார்டுகள், நகராட்சிகளில் 3,613 வார்டுகள், பேரூராட்சிகளில் 8,288 வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகள், பஞ்சாயத்து யூனியன்களில் 6,471 வார்டுகள், கிராம பஞ்சாயத்து வார்டுகள் 99,324 என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன.

,ந்த உள்ளாட்சி பதவிகளுக்கான பதவி காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தேதியை தமிழக தேர்தல் ஆணையம்  கடந்த 2016ம் ஆண்டு  செப்டம்பர் 25ந்தேதி அறிவிக்கப்பட்டது.

அதை எதிர்த்து திமுக திமுக தாக்கல் செய்த வழக்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் உயர்நீதி மன்ற உத்தரவுபடி வார்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கவும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உள்ளாட்சி வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும்  ஆக.15ந்தேதியுடன் முடிவடைந்து  அறிக்கை ஆகஸ்டு 30ந்தேதி சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகே உள்ளாட்சி தேர்தல் குறித்து யோசிக்க முடியும் என்று  மாநில தேர்தல் ஆணையம் கூறியது.

இதற்கிடையில்,  உள்ளாட்சிகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 4 முறை நீடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிடும்படி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து  தமிழக தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்,  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட  வேண்டும் என்றும்  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்து அக்டோபர் 24-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.