மாநில முதல்வர்கள் கவுன்சில் மாநாடு:   ஜெ. பங்கேற்கவில்லை

சென்னை:

புதுடெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற இருக்கும் மாநில முதல்வர்கள் கவுன்சில் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெ பங்கேற்கவில்லை என தெரிகிறது.

மத்திய  – மாநில அரசுசுகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகள், அண்டை மாநிலங்களுக்கிடையான கருத்து வேறுபாடுகளை பற்றி விவாதிக்க மாநில கவுன்சில் 1990ல் உருவாக்கப்பட்டது. கவுன்சில் கூட்டம் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது , கடந்த 2006ம் ஆண்டு நடந்தது. அதன்பின்னர் 2016ல்தான் நடக்க இருக்கிறது.

jeya

பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற உள்ள கவுன்சில் கூட்டம் நாளை மறுதினம் 16ம் தேதி டெல்லியில் நடக்கிறது. அன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன், பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்துகொள்வதை தவிர்த்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக  தெரிகிறது..