நியூயார்க் :

 

அமெரிக்காவில் நடக்கவிருந்த வர்த்தக மாநாடு கொரோனா வைரஸ் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சுற்றி மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை திட்டமிடப்பட்ட பல்வேறு மாநாடுகளுடன், வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வட்டமேசை மாநாட்டை வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் (சி.எஃப்.ஆர்) ரத்து செய்தது.

சி.எஃப்.ஆரின் “கொரோனா வைரஸின் கீழ் வர்த்தகம் செய்தல்” என்பது குறித்த மாநாடு நியூயார்க் மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்துள்ளது இந்த அமைப்பு.

நியூயார்க்கில் இதுவரை 173 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதில் இங்குள்ள நியூ ரோசெல் எனும் பகுதியில் மட்டும் 108 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதால் சுமார் 2.5 சதுர கி.மீ. “கட்டுப்பாட்டு மண்டலமாக” நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த பகுதியில், தேசிய பாதுகாப்பு படையினர் மூலம் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

நகர நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால்கொரோனா வைரஸின் கீழ் வர்த்தகம் செய்தல்” குறித்து விவாதிக்க இருந்த மாநாடு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.