கொரோனா வைரசுக்கு எதிராக சீனா கடுமையாக போராடி வருகிறது: டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிரான சீனா கடுமையாக போராடி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் உலகமே அரண்டு போய் இருக்கிறது. பலி எண்ணிக்கை அந்த நாட்டில் 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

உலகின் மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசை எதிர்த்து சீனா கடுமையாக போராடி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை கூறி இருக்கிறார். டிரம்ப் மேலும் கூறியதாவது: அவர்களின் முயற்சி, போராட்டம் கடுமையாக இருக்கிறது. விரைவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.