எல்லையில் மோதல்: பாக். தாக்குதலுக்கு இந்தியா பதிலடி

பூஞ்ச்:

இந்திய – பாக் எல்லைப் பகுதியான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லை பகுதியில் இந்தியா – பாக் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் தொடுத்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.