சலசலப்பை தொடர்ந்து அதிமுக ஆட்சிமன்ற குழு மாற்றியமைப்பு

--

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து இன்று ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் அதிமுக தலைமை அலுவலவகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து முதல்வர் எடப்பாடி தலையிட்டு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, தற்போது அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் 7ல் இருந்து 9 ஆக உயர்த்தி மாற்றி இரு தரப்பினருக்கும் தலா இரண்டு உறுப்பினர்கள் பதவி கொடுக்கப்பட்டு ஆட்சிமன்றக்குழு மாற்றி அமைக்கப்பட்டது.

ஏற்கனவே இருந்த அதிமுகவில்,  ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களாக  ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன் இருந்தனர். அவர்கள் மறைவை தொடர்ந்து ஆட்சி மன்றகுழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டத்தை தொடர்ந்து, இரு அணியை சேர்ந்தவர்களுக்கும்  சமமாக ஆளுக்கு இரண்டு உறுப்பினர் என்ற அளவில் பங்கிட்டு, ஆட்சி மன்றக்குழுவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தி ஆட்சி மன்றகுழுவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக இரு அணிகளுக்கு இடையேயான சலசலப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.