சென்னை சட்ட கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்! பரபரப்பு

சென்னை,

சென்னை பாரிமுனையில் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் அமைந்துள்ள சட்டக்கல்லூரியில் இன்று இரண்டு வகுப்பு  மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

சென்னை பாரிமுனை பகுதியில்   சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் தமிழ்நாடு அம்பேர்கர் சட்டக்கல்லூரி நடைபெற்ற வருகிறது.

மாணவர்கள் எளிய முறையிலும், நடைமுறை வாயிலாகவும் சட்ட அறிவு பெறும் வகையில் சட்டக்கல்லூரி ஐகோர்ட்டு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இன்று திடீரென கல்லூரியில் பயின்றுவரும் 3-ம் ஆண்டு மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

சட்ட கல்லூரி வாசலில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சட்ட கல்லூரி வாளகம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர்களின் இரு பிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதல், அதை வேடிக்கை பார்க்க போலீசார் குறித்தும் பரபரப்பான ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி   நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று ஏற்பட்ட மோதல் மீண்டும் 2008ம் ஆண்டு மோதலை நினைவுபடுத்தி விடுமோ என அனைவரும் அஞ்சி உள்ளனர்.

தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் சட்டக்கல்லூரி வளாகம் உள்ளது.