இரு சமுகத்தினரிடையே மோதல்: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி திருமாளவன் மனு

அரியலூர்:

ரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இரு சமுகத்தினரிடையே நேற்று ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக  பொன்பரப்பில் 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையரிடம் விசிக தலைவர் திருமாவளவன் மனு கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று தேர்தல் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று மாலை வாக்குப்பதிவு மையம் அருகே சிலர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை சின்னத்தை போட்டு உடைத்ததால், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஏராளமான வீடுகள் தாக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், பதற்றம் நிலவி வருகிறது.

இநத் நிலையில், காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு  சென்றார்.

அதைத்தொடர்ந்து பொன்பரப்பியில் 4 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.