மரடோனாவுக்கும், மடோனாவுக்கும்  வித்தியாசம் தெரியாத ரசிகர்கள். பாடகிக்கு அஞ்சலி செலுத்திய விநோதம்..

ர்ஜெண்டினா நாட்டு கால்பந்து வீரரான மரடோனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் ஆவார்.
60 வயதான மரடோனாவுக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு அண்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.


பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய அவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
மரடோனாவுக்கு உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரபல பாப் பாடகி மடோனாவின் ரசிகர்கள், செய்தியை அறைகுறையாக புரிந்து கொண்டு, தங்கள் வலைத்தளங்களில் பாடகிக்கு அஞ்சலி செலுத்திய விநோதமும் நிகழ்ந்தேறியுள்ளது.
மரடோனா காலமானதை மடோனா காலமானதாக நினைத்து, முகநூல் உள்ளிட்ட வலைத்தளங்களில் அந்த பாப் பாடகியின் , அபிமானிகள் இரங்கல் கவிதை தீட்டிய வண்ணம் உள்ளனர்.
‘ மடோனா ! உங்களுக்கு கால்பந்தும் விளையாட தெரியும் என்பதை இப்போது தான் அறிந்தேன்’’ என சில ரசிகர்கள் வியந்து’’ மடோனாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்’’ என சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி ,மடோனாவுக்கு ‘’ஷாக்’’ அளித்துள்ள்னர்.

-பா.பாரதி.