மும்பை :

ங்கி கடனுக்கு செலுத்தவேண்டிய மாத தவணை மூன்று மாதங்களுக்கு தளர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகந்த தாஸ் அறிவித்திருந்தார்.

இதன்பயனாக, ஊரடங்கு உத்தரவால் வருமான இழப்பை சந்திக்க நேரிடும் மக்கள் தங்களது வங்கி கடன் தவணையை மூன்று மாதங்கள் தள்ளி கட்டலாம் என்ற ஆறுதல் கிடைத்தபோதும்.

கடன்வழங்க கூடிய சம்பந்தப்பட்ட வங்கிகள் இதுவரை இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கணக்கில் இருப்பு வைக்க கூறி நினைவூட்டல் குறுஞ்செய்திகளை வழக்கம் போல் அனுப்பியுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் வங்கிகளை அணுகி இதுகுறித்து விசாரித்த போது, சம்பந்தப்பட்ட வங்கிகளின் தலைமையகத்தில் இருந்து இதுவரை தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறுகின்றன.

இதனால், நாளை முதல் வங்கி கடன் தவணை கட்டுவோர் விழிபிதுங்கி நிற்கின்றனர். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு பின்னும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வங்கிகளும், வாடிக்கையாளரும் தவித்துவருகின்றனர்.

வங்கிக்கணக்கில் பற்றுவைக்கப்படும் கடன் தவணையானது, கணக்கில் பணம் இல்லாவிட்டால் பிடித்தம் செய்யப்படும் அபராதத்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வங்கிகளோ, “இது தள்ளுபடி கிடையாது, மூன்று மாத தவணையை கட்டுவதற்கு அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், இதை எப்படி இருந்தாலும் கட்டியாகவேண்டும், அதனால் கட்டி விடுவது நல்லது” என்ற ரீதியில் அறிவுறுத்துகின்றன.