பெங்களூரு

ர்நாடகாவில் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை என்பதில் குழப்பம் நிலவுவதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கூறி உள்ளார்.

எடியூரப்பாவின் ராஜினாமாவை தொடர்ந்து மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக வரும் 23 ஆம் தேதி அன்று பதவி ஏற்க உள்ளார்.    அத்துடன் இன்று அமைச்சரவை அமைப்பது குறித்து டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்ய உள்ளார்.   இந்நிலையில் அமைச்சரவை அமைப்பது குறித்து பல செய்திகள் வெளியாகி வருகின்றன.

கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாள்ர் வேணுகோபால், “தற்போது இரு கட்சிக்கும் எத்தனை அமைச்சர் பதவியை ஒதுக்கீடு செய்வது என்பதிலும்  யாருக்கு எந்த துறை என்பதிலும் குழப்பம் உள்ளது.  இது குறித்து தலைமையுடன் பேசிய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.   ஆகையால் புதன்கிழமை  குமாரசாமி மட்டுமே பதவி ஏற்க உள்ளார்.”  என தெரிவித்துள்ளார்.

தற்போது இரு துணை முதல்வர்கள் அமைச்சரவையில் இடம் பெறலாம் என நம்பப்படுகிறது.   அத்துடன்  குமாரசாமி பதவி ஏற்றதும் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.   எனவே பெரும்பான்மையை அவர் நிரூபித்த பின்பே அமைச்சரவை பதவி ஏற்கும் என சொல்லப்படுகிறது.