புதிய சுதந்திர போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு

ரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒரு சார்பையும், அச்சுறுத்தலையும் கைக்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி ஒரு புதிய சுதந்திர போராட்டம் நடத்தவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் சேவாகிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டில்லிக்கு வெளியே போராட்டம் நடத்த திரண்ட விவசாயிகள் மீது காவல்துறையினரின் நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். “நாட்டில் மதவாதத்தின் விஷத்தை முறிப்பதற்காக மகாத்மா காந்தி தனது உயிரையே தியாகம் செய்தார். அவரது பாதையை பின்பற்றுவது காங்கிரஸ் கட்சி மட்டும்தான்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான அரசு ஒரு சார்பையும், அச்சுறுத்தலையும் கைக்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி ஒரு புதிய சுதந்திர போராட்டம் நடத்தவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.