ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுவருகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த ஏழாம் தேதி வரை நடைபெற்றது.  இறுதிக்கட்டமாக கடந்த 7ம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி ஐந்து மாநில தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்தன.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில்,  இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள்  நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்பட, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம் ஆகிய  மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுவருகிறது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் மிசோராமில் எம் என் எஃப் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன