ரஃபேல் விமான ஒப்பந்தம்: ராகுல்காந்தி மீது அனில் அம்பானி பாய்ச்சல்

டில்லி:

ந்தியா வாங்க உள்ள  ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில்,  தவறான தகவலின் பேரில் குற்றம்சாட்டுகிறார் ராகுல்காந்தி  என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த போர் விமான ஒப்பந்தம் காரணமாக  ரிலையன்ஸ் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் கூறி உள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் என்றும், பிரதமர் மோடியின் மாயாஜாலத் தால் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

பிரான்ஸ் நாட்டில்  இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016 ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதுகுறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி வருகின்றார். இந்த விமான ஒப்பந்தம் ஆரம்பத்தில் ரூபாய்  540 கோடி என்ற நிலையில, தற்போது 1600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  இந்த ஒப்பந்தம் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் என்றும்  ராகும் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி விளக்கம் அளித்து கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ரஃபேல் உடன்பாடு குறித்துத் தனது போட்டி நிறுவனங்களால் காங்கிரஸ் கட்சிக்குத் தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தன்னை வேதனையடையச் செய்துள்ளது என்று கூறி உள்ளார்.

மேலும்,  ரஃபேல் போர் விமானம் ரிலையன்ஸ் நிறுவனத்தாலோ, டசால்ட் ரிலையன்ஸ் கூட்டு நிறுவனத்தாலோ தயாரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அனில் அம்பானி,  2015ஏப்ரல் 10ந்தேதி அன்று 36 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா உடன்படிக்கை செய்ததாகவும், அதற்கு 12நாட்களுக்கு முன்தான் (மார்ச் 28, 2015) ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டதாகவும் ராகுல் தெரிவித்துள்ள தகவல்  முற்றிலும் தவறானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் ரிலையன்ஸ் குழுமம் இறங்கும் என 2014டிசம்பரிலேயே அறிவிக்கப்பட்டது என்றும் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி