சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி சபாநாயகருடன் காங்.எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு

சென்னை:

மிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலை இன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென சந்தித்து பேசினார். இதனால் கோட்டை வட்டாரம் பரபரப்பு அடைந்தது.

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளில் இடையே, கூட்டணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மதிமுக, விடுதலை சிறுத்தை கள் போன்ற கட்சிகள் கூட்டணியை உறுதிபடுத்தும்படி திமுகவுக்கு கோரிக்கை வைத்தன.

இதன் காரணமாக  திமுக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று திடீரென கோட்டைக்கு வந்து, சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அவர்கள் கஜா புயல் நிவாரணம் மற்றும் மேகதாது அணை குறித்து விவாதிக்க சட்ட மன்ற அவசர கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியே சபாநாயகரை சந்தித்ததாக தெரிவித்தனர். இதன் காரணமாக பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இன்று காலை  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுபிபனர்கள் தலைமை செயலகம் வந்தனர். அங்கு சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள சபாநயகர் அறைக்குச் சென்று அவரை சந்தித்து பேசினார்.

அப்போது, கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம். கஜா புயல் நிவாரணமாக மத்தியஅரசு வழங்கியுள்ள மிகக்குறைவான  நிதி,  மற்றும் மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதால் உடனே சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.