Random image

மத்தியப் பிரதேசம் : கல்லூரியை திறந்து வைத்த காங்கிரஸ் எம்பி மீது வழக்கு

த்லாம்

முதல்வர் திறந்து வைப்பதற்கு முதல் நாள்  மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்த காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் மீது ம.பி. காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி அருகில் உள்ள ரத்லாம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது.    இந்த மருத்துவக் கல்லூரியை கடந்த புதன்கிழமை அன்று ம பி முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காந்திலால் பூரியா

ரத்லாம் மக்களவை தொகுதி உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் பூரியா உள்ளார்.   இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.   இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதை ஒட்டி நலத்திட்டங்கள் அறிமுகம் செய்வதில் பாஜகவும் காங்கிரசும் போட்டி போட்டு வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காந்திலால் பூரியா தனது ஆதரவாளர்கள் மற்றும் ஒரு புரோகிதர் ஆகியோருடன் இந்த மருத்துவக் கல்லூரிக்கு வந்தார்.  அதன் பிறகு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தானே இந்த மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார்.    ஆரம்ப தின பூஜை உடன் வந்த புரோகிதரால் நடத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நாள் நன்றாக இருந்ததால் தாம் துவக்க விழாவை நடத்தியதாக பூரியா தெரிவித்துள்ளார்.   மேலும் இந்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான உத்தரவு முந்தைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டதால் தமக்கே திறந்து வைக்கும் உரிமை உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

இதை அறியாத முதல்வர் அடுத்த நாளான புதன் கிழமை வந்து அதிகாரபூர்வமாக திறப்பு விழாவை நடத்தி மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார்.

தற்போது மத்தியப் பிரதேச காவல்துறை காந்திலால் பூரியா மீது வழக்கு பதிந்துள்ளது.  அவருடன் வந்த அவருடைய ஆதரவாளர்கள் 15 பேரும் வழக்கில் சேர்க்கப் பட்டுள்ளனர்.