காங்.அரசுகள் விவசாய கடன் தள்ளுபடி எதிரொலி: குஜராத், அசாம் மாநில பாஜ அரசுகளும் தள்ளுபடி

டில்லி:

மீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலிகளில், 3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்து உள்ளன.

இந்த நிலையில், அசாம் மாநில பாஜக அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது. குஜராத் மாநில பாஜக அரசு ரூ.600 கோடி அளவிலான மின் பாக்கியை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது.

குஜராத் அமைச்சர் சௌரவ் படேல்

காங்கிரஸ் அரசுகள் பதவி ஏற்றதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்து,  நாடு முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், செய்தவதறியாது திகைத்து வந்த பாஜக மாநில அரசுகளும், தற்போது காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஏட்டிக்கு போட்டியாக தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது.

அதைத்தொடர்ந்து,  குஜராத் கிராம மக்களின் 625 கோடி ரூபாய் மின்சார கட்டண பாக்கியை தள்ளுபடி செய்வதாக குஜராத் பாஜக அரசு அறிவித்து உள்ளது.

குஜராத் காந்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மின்துறை அமைச்சர் செளரப் பட்டேல் (Saurabh Patel) கிராம பகுதிகளில் உள்ள 6 லட்சத்து 20 ஆயிரம் பேர், செலுத்த வேண்டிய 625 கோடி ரூபாய் மின்சார கட்டண பாக்கி, ஒரே தவணை யில் தீர்வுகாணும் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள், வெறும் 500 ரூபாய் மட்டும் செலுத்தி, தங்கள் இணைப்பை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சலுகை அறிவித்து உள்ளார்.

அதுபோலவே,  அசாம் மாநிலத்தில் ரூ600கோடிக்கு விவசாய கடன் ரத்து செய்யப்படுவதாக மாநில பாஜக அரசு அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி  தழுவ நேரிடும் என்ற பயத்தில் பாஜக மாநில அரசுகள், தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. விரைவில் மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் பல்வேறு தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.