எபோலா வைரஸ் தாக்குதல்: ஆப்பிரிக்கநாடான காங்கோவில் 600 பேர் பலி

காங்கோ:

த்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வந்த எபோலா வைரஸ் தாக்குதல் கடந்த 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. முதன்முதலாக கினியா நாட்டில் பரவிய இந்த நோய், பின்னர் படிப்படியாக  சிரியாலோன், லைபிரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட பல நாடுகளை தாக்கி வந்தது.

1976ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலா நோய்க்கு 150க்கும் மேற்பட்டோர் பலியான தாக கூறப்பட்டது. இடையில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் பரவுவதாக கடந்த அண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில்  தற்போது சுமார் 600 பேர் வரை மரணம் அமைந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.

‘காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு  ஜூலை மாதம் முதல் அதிகரித்து வருகிறது. இதுவரை 600 பேர் பலியாகி இருப்பதாகவும்,  1,041 பேருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கோ நாட்டின் சுகாதாரத்துறை,  ஏற்கனவே முன்னெச்சரிக்கை யாக  தடுப்பூசிகள் போட்டப்பட்டதன் வாயிலாக சுமார்  70,000  பேருக்கு நோய் பரவல் தடுக்கப்பட்டுதாகவும்,  மேலும் பெரிய நகரகளுக்கு எபோலா நோய் பரவலையும் தடுத்து விட்டதாகவும் கூறி உள்ளது. , தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. அதன்காரணமாக 11ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.