டில்லி:

செய்தியாளர்களை முதன்முறையாக சந்தித்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

மோடி பதவி ஏற்றது முதல் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து வந்த நிலையில், இன்றுதான் முதன்முறையாக பாஜக தலைவர் அமித்ஷாவுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், தேர்தல் முடிய சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இப்போதுதான் செய்தியாளர்களை சந்திக்கிறார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போதாவது முதல்முறையாகசெய்தியாளரை சந்திக்கிறார அதற்காகவே நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்

ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் என்னுடன் விவாதத்திற்கு தயாராக இல்லை. என்னுடன் ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிவிவாதம் செய்ய தயாரா..? என்று கேள்வி எழுப்பிய ராகுல்,  ரஃபேல் குறித்த விவாதத்துக்கு நான் உங்களுக்கு சவால் விடுத்தேன். நீங்கள் ஏன் அதை ஏற்கவில்லை? அதற்கான பதிலை செய்தியாளர்களிடம் கூறுங்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல்,  உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணியை நான் மதிக்கிறேன். நான் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் பிரியங்காவிடம் தெளிவாக கூறிவிட்டேன்.

மே 23-ஆம் தேதி மக்களின் முடிவு என்னவென்று தெரியவரும். அதனைப் பொறுத்து எங்கள் வேலைகளை மேற்கொள்வோம்.’ என ராகுல்காந்தி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் எங்களுக்கு மூன்று குறிக்கோள்  இருப்பதாக கூறியவர்,

முதல் குறிக்கோள் பாஜகவை அகற்றுவது.

2-வது குறிக்கோள் காங்கிரஸ் சித்தாந்தத்தை உத்தரப் பிரதேசத்தில் புகுத்துவது.

3-வது குறிக்கோள் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது. அதற்கு இன்னும் நேரம் உள்ளது.

இவ்வாறு ராகுல் கூறினார்.