வாழ்த்துக்கள் மோடிஜி… உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்..! ராகுல்காந்தி டிவிட்

டில்லி:

வாழ்த்துக்கள் மோடிஜி… உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்.. ராகுல்காந்தி  நக்கல் செய்து டிவிட் போட்டுள்ளார்.

மோடி பிரதமராக பதவி ஏற்றதுமுதல் இதுவரை செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வந்த நிலை யில், ஆட்சியின் இறுதி நாளான இன்று முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.  ஆனால், இந்த சந்திப்பு ஒருவழிப் பாதையாவே அமைந்திருந்தது. செய்தியாளர்கள் யாரும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்டவில்லை. இது விமர்சனத்துக்கு உள்ளாது.

இந்த நிலையில், “மோடியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள் ளார். அதில்,  5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி, கேள்விகள் எதையும் எதிர்கொள்ளாமல், அமித் ஷாவை பதலளிக்கச் செய்ததற்கு, எக்ஸலன்ட் மோடிஜி.. இன்னும் போர் முடியவில்லை. அடுத்த முறை உங்களையே பதிலளிக்குமாறு அமித் ஷா கூறுவார் பாருங்களேன்”   என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.