தோழர் ஜிக்நேஷூக்கு வாழ்த்துகள்!: இயக்குநர் பா.ரஞ்சித்

ஜிக்நேஷ் மேவனி – பா.ரஞ்சித்

குஜராத் மாநிலத்தில் தலித் இன மக்களின் தலைவர்களில் ஒருவர் ஜிக்நேஷ் மேவனி.  அம்மாநிலத்தில், தோலை உரிப்பதற்காக இறந்த மாட்டை எடுத்துச்  சென்ற நான்கு தலித் இளைஞர்கள் நடு சாலையில் ஆடைகள் களையப்பட்டு தாக்கப்பட்டனர்.  கடந்த வருடம் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

.ரஞ்சித் ட்விட்

இந்த சம்பவத்தைக் கண்டித்து தாழ்த்தப்பட்டவர்களை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமான பேரணியை நடத்தினார் ஜிக்நேஷ் மேவனி.

தற்போது நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாக வடகாம் தொகுதியில் போட்டியிட்டார்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அவர் வெற்றி பெறும் நிலையில் உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

தனது பதிவில், “வாழ்த்துகள் தோழர் ஜிக்நேஷ் மேவனி!  உங்களது வெற்றி, பாஸிஸத்துக்கு எதிரான போராட்டத்துக்கு எதிரான முன்னோட்டம். தமிழக மக்கள் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகள்” என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.