நண்பர் பினராயி விஜயன், துரைமுருகன் நலம்பெற வாழ்த்துகிறேன் – கமல்ஹாசன்

சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விரைவில் நலம்பெற நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 திமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தற்போது துரைமுருகனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட துரைமுருகன் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”திமுக பொதுச்செயலாளர் நண்பர் துரைமுருகன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.