நமது மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த  பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற  பாரா ஒலிம்பிக்கில் நடைபெற்ற  உயரம் தாண்டும் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த  மாரியப்பன் தங்கவேல் தங்கம் வென்றறார். இவருக்கு மத்திய அரசு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவித்து உள்ளது.  வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி.

இந்த  நிலையில்,  தமிழக வீரர் மாரியப்பனுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.