காமன்வெல்த் 2018: தங்கம் வென்ற தமிழகவீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு ஜனாதிபதி வாழ்த்து

கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி பளுதூக்கும் பிரிவில் தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

அவருக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் பதிவிட்டுள்ள டுவிட்டில்,  காமன்வெல்த் போட்டியில் கடந்த 3 நாட்களாக இந்திய பளு தூக்கும் வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும்,  சதீஷ்குமார் சிவங்கம் தங்கம் வென்றுள்ளதற்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஆடவர் 77கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட தமிழக வீரர் சதீஸ்குமார் சிவலிங்கம்  முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.