டில்லி

தவறாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யாத மணிப்பூர் ஆளுநருக்குக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட  12 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் பாஜகவால் நியமன உறுப்பினர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.  இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த 2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த நியமனம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது

ஆனால் மணிப்பூர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அவர்களைத் தகுதி நீக்கம் செய்யாமல் உள்ளார்.  இது குறித்து காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ”கடந்த 2018 ஆம் வருடம் ஊதியமுள்ள இரு பணிகளைப் புரிவதாக 12 மணிப்பூர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தும் இந்த உறுப்பினர்களை மணிப்பூர்  ஆளுநர் தகுதி நீக்கம் செய்யவில்லை.   அவர் மணிப்பூர் மாநில பாஜக அரசைக் காப்பாற்றத் தவறாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யாமல் உள்ளார்” எனக் குற்றம் சாட்டி உள்ளார். இதே கருத்தை மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துத் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில், ”எங்கள் பரிந்துரையை ஏற்கனவே மணிப்பூர் ஆளுநருக்குத் தெரிவித்துள்ளோம். ஆனால் அவர் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.” எனக் கூறியது   இந்நிலையில் தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் இது போல எவ்வித தகவலும் ஆணையம் ஆளுநருக்கு அனுப்பவில்லை என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.