லக்னோ,

உ.பி.மாநிலத்தில்  கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெற்ற பச்சிளங்குழந்தைகளின் பரிதாப மரணம் காரணமாக, ஆளும் யோகி தலைமையிலான பாரதியஜனதா அரசுக்கு பொதுமக்களி டையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக சுறுசுறுப்பாக களமிறங்கி பணியாற்றி வரும் காங்கிரசாரின் பணி பொதுமக்களுடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ், தற்போது ராகுல் காந்தியின் கோரக்பூர் பயணத்தை தொடர்ந்து மீண்டும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.

உ.பி., அரசு மருத்துவ மனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாக உள்ளனர். இந்த சம்பவத்தில் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாடு முழுவதும் பாரதியஜனதா மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உ.பி. வந்த அகில இந்திய காங்கிரஸ் துணைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்து, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் ஒன்றும் சுற்றுலா தளம் அல்ல என்று கூறினார்.

அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியும் கோரக்பூர் விசிட் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் காரணமாக மாநில காங்கிரசார் தீவிர சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரக்பூர், அதைச் சுற்றியுள்ள பகுதி களில், காலங்காலமாக நிலவும் அவலங்களை, காங்., சுட்டிக் காட்டி அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளில், பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறோம் என்றும், செயல்படாமல் துாங்கிக் கிடக்கும்  மாநில  அரசை தட்டி எழுப்ப முயற்சிக்கிறோம் என்று காங்., செய்தித் தொடர்பாளர், த்விஜேந்திர திரிபாதி செய்தியாளர்களிடம் கூறினார்.

குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தற்போது புதுத்தெம்புடன் கட்சி பணி ஆற்றி வருவதாக கூறப்படுகிறது.