ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதிகள், மற்றும்,  மண்டல்கர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 29ந்தேதி நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல்  எண்ணப்பட்டு வருகின்றன.

அஜ்மீர் மற்றும் அல்வார் பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர்கள் காலை முதலே முன்னிலை வகித்து வருகின்றனர்.

அதுபோல, மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்வி வேக் தக்கார் 45011 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளர் சக்தி சிங் ஹடாவை விட  முன்னிலையில் வந்துகொண்டிருக்கிறார்.

அல்வார் தொகுதியில், பாஜக வேட்பாளரான ஜஸ்வந்த் சிங் யாதவை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளரான கரன்சிங் யாதவ் 266814 வாக்குகள் பெற்று,  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

அதுபோல, அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் ரகு சர்மா 154336 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளர் ராம் சுவரூப் லம்பாவை விட,  முன்னிலை வகித்து வருவதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதன் காரணமாக ராஜஸ்தானில் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

 

இதேபோல், மேற்கு வங்காளத்தின் உலுபெரியா பாராளுமன்ற தொகுதி, நவுபாரா சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.