குஜராத்:
குஜராத் காங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் மனு சிங்வி திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த ஐந்து எம்எல்ஏக்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து இந்தச் வழக்கை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்எல்ஏக்களான அக்ஷய்பட்டேல் மற்றும் கங்காரியா ஆகியோர் பாஜகவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் பேசிய பதிவு இருப்பதாகவும், ராஜினாமா செய்த ஐந்து எம்எல்ஏகளும் பாஜகவிடம் பணம் வாங்கி உள்ளனர் என்றும் அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜினாமா செய்த ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏகளையும் தற்போது பாரதிய ஜனதா கட்சி குஜராத் இடைத் தேர்தல்களில் களமிறக்கி உள்ளது.

ஆகையால் இதற்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த ஊழலில் ஈடுபட்ட அனைவரிடமும் தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது குறைந்தபட்சம் உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.