உத்திரப் பிரதேச காங்கிரசுடன் அப்னாதள் கட்சி கூட்டணி : இரு தொகுதிகள் ஒதுக்கீடு

டில்லி

த்திரப்பிரதேச மாநிலக் கட்சியான அப்னா தள் கட்சி மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலக் கட்சியான அப்னா தள் கட்சியின் தலைவர் கிருஷ்ணா படேல் ஆவார்.  கிருஷ்ணா படேலின் அப்னா தள் கட்சி காங்கிரசுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.  இவருடய மகளும் அப்னாதள் (சோனேலால்) கட்சியின் தலைவருமான அனுப்ரியா படேல் பாஜக அமைச்சரவையில் அமைச்சராக பதவியில் உள்ளார்.

நேற்று காங்கிரஸ் மற்றும் அப்னாதள் கட்சிகள் இடையில் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் கட்சி அப்னாதள் கட்சிக்கு பஸ்தி மற்றும் பிலிபித் அகிய இரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கூட்டணியை உறுதி செய்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செயலர்கள் பிரியங்கா காந்தி மற்றும் ஜோதித்ராதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் கிருஷ்ணா படேலின் மருமகனான பங்கஜ் சிங் சாந்தல் காங்கிரசில் இணைந்தார். அப்போது கிருஷ்ணா படேலும் உடன் இருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்னா தள் (சோனேலால்) கட்சியின் தலைவர் அனுப்ரியா படேல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அந்த கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் மிர்ஸாபூர் தொகுதியில் அனுப்ரியா போட்டி இட உள்ளார். மற்றொரு தொகுதி குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.