ஆம் ஆத்மி மேடையில் காங்கிரஸ்… டெல்லியில் புதிய திருப்பம்..

ஆம் ஆத்மி மேடையில்  காங்கிரஸ்…   டெல்லியில் புதிய திருப்பம்..

தமிழ்நாட்டில் தி.மு.க.-அ.தி.மு.க. போன்று டெல்லியில் காங்கிரசும்,ஆம் ஆத்மி கட்சியும் சண்டைக்கோழிகள்.

டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசை அகற்றி விட்டு –அரியணையில் அமர்ந்தார் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்.

இரண்டு கட்சிகளுக்குமே கொடுக்கல் –வாங்கல் கிடையாது. பொது மேடைகளில் ஒன்றாக போஸ் கொடுப்பார்கள்.கடந்த மாதம் கொல்கத்தாவில் மம்தா நடத்திய பேரணியில் காங்கிரசும்,ஆம் ஆத்மியும் பங்கேற்றன.

எதிர்பாராத திருப்பமாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் காங்கிரசும் கலந்து கொண்டது- அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேடையில் கெஜ்ரிவால் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நின்று கொண்டிருந்தார்.ஆம் ஆத்மியின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றது இதுவே முதன் முறை.

மம்தாவின் பரம வைரிகளான சி.பி.எம்.-சி.பி.ஐ.தலைவர்களையு ம் இந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

ஆனால் விழாவின் நாயகியாக உருவகப்படுத்தப்பட்ட ,மம்தா- மேடைக்கு  வரும் முன்பாக எச்சூரி,டி.ராஜா ஆகிய இரு இடதுசாரி தலைவர்களும் கிளம்பி சென்று விட்டனர்.

மற்றொரு அதிரடி திருப்பமாக –இந்த கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின்  ரகசிய கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சரத்பவாருடன் ராகுல்,மம்தா,கெஜ்ரிவால்,சந்தி ரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த ஒன்று பட்டு செயல்படுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

–பாப்பாங்குளம் பாரதி

Leave a Reply

Your email address will not be published.