புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து….காங்கிரஸ், திமுக எம்எல்ஏ.க்கள் டில்லி பயணம்

புதுச்சேரி:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி பிரதமர், தலைவர்களை சந்திக்க காங்கிரஸ், திமுக எம்எல்ஏ.க்கள் இன்றிரவு டில்லி செல்கின்றனர்.

புதுச்சேரி தற்போது யூனியன் பிரதேச அந்தஸ்தில் உள்ளது. இதை மாநில அந்தஸ்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி காங்கிரஸ், திமுக எம்எல்ஏ.க்கள் இன்று இரவு டில்லி செல்கின்றனர்.

மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, கனிமொழி, தம்பிதுரை ஆகியோரை நாளை சந்திக்கின்றனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஆதரவு வழங்கும்படி அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் பிரதமரையும் சந்திக்க எம்எல்ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.